Pimples - Homeopathy Faqs
Still If you have
questions, you can posts your Questions in below comments box.
1. முகப்பருக்கள் மரபணு சார்ந்த பிரச்சனையா?
மரபணுக்களால்
வர வாய்ப்புகள் உண்டு. நோயின் தன்மை அதற்கு ஏற்ப மாறுபடும்.
2. முகப்பருக்கள் அவசியம் கவனிக்கப்பட
வேண்டிய நோயாகுமா?
முகத்தின்
அழகு தன்னம்பிக்கை குறைக்கும் என்பதால் முகப்பருக்கள் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய
நோயாகும்.
3. முகப்பருக்கள் எந்த வயது முதல் எந்த வயது வரை தென்படுகிறது?
பருவ
வயது 14 - 21
4. முகப்பருக்களை முற்றிலுமாக நீக்குவதற்கு
மருத்துவம் உள்ளதா?
முறையாக
மருந்துகளை மேற்கொண்டால் நிரந்தரமாகவும் முழுமையாகவும் தீர்வுகள் காணலாம்.
5. மருத்துவ முறையில் முகப்பருக்கள்
நீக்கிவிட்ட பின்னர் மீண்டும் வருவதற்கான வாய்ப்புள்ளதா?
நோயின்
தன்மை மற்றும் அதன் வீரியம் பொருத்து வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
6. முகப்பருக்களுக்கான மருத்துவம் எவ்வளவு
காலம் எடுத்து கொள்ள வேண்டும்?
மருத்துவம்
ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் சிறந்த தீர்வை காணலாம் மருத்துவம் மேற்கொள்வது
தாமதமானால் சிகிச்சையின் காலமும் தாமதமாகும்.
7. நிரந்தரமாக முகத்தில் உள்ள பருக்களுக்கு
தீர்வு உண்டா?
முறையான
மருத்துவம் மேற்கொண்டால் மூன்று முதல் ஆறு மாதத்தில் சரியாக வாய்ப்புகள் உண்டு.
8. வெளிப்புறமாக பயன்படுத்தும் மருந்துகள் களிம்புகள்
(ஆயில்மெண்ட்) பயன்படுத்தலாமா ?
வெளிப்புறமாக
பயன்படுத்தும் களிம்புகள் (ஆயில்மெண்ட்) மூலம் நிரந்தர தீர்வுகள் கிடைப்பதற்கு
வாய்ப்புகள் குறைவு.
9. முகப்பருக்கள் உள்ள நபர்கள் மூலம்
மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுமா?
ஒரு
நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவாது.
10. முகப்பருக்களை இயற்கை உணவு மூலம்
கட்டுப்படுத்தலாமா?
ஆம், புளிப்பு, எண்ணெய், காரம் பதார்தங்களை
குறைக்கும் போது கட்டுக்குள் இருக்கும் ஆனாலும் முழுமையாக சரியாவது இயலாது
11. குறிப்பிட்ட வயதிற்கு மேல் முகப்பருக்கள்
இயற்கையாகவே மறைந்து விடுமா?
ஹார்மோன்
மாற்றங்கள் சரியாகும் போது முகப்பருக்கள் இயற்கையாகவே மறைய வாய்ப்புகள் உண்டு
முழுமையாக சரியாகும் என்று கூற இயலாது.
12. முகப்பருக்கள் உடலில் மற்ற பாகங்களில்
ஏற்படுமா?
சரியான
மருந்துகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் மற்ற இடங்களிலும் பரவக்கூடும்.
13. முகப்பருக்களுக்காக மருந்துகள்
எடுத்துக்கொள்ளும் போது உடலின் நிறம் மாறுமா?
சிகிச்சையால்
உடலின் நிறம் மாறாது. ஒவ்வாமையால் மாற வாய்ப்புகள் உண்டு ஆனால் ஹோமியோபதி
சிகிச்சையில் ஒவ்வாமை வருவது இல்லை, மேலும் கரும்புள்ளிகள்
மறைய வாய்ப்புகள் உண்டு.
14. முகப்பருக்களுக்காக ஏதேனும் உணவு
கட்டுப்பாடுகள் உள்ளனவா?
புளிப்பு, காரம், எண்ணெய் போன்ற
பதார்த்தங்களை தவித்தால் முகப்பருக்கள் மட்டுப்படும்.
15. முகப்பருக்களில் இரத்தம் கசிவிற்கு
காரணம் என்ன?
முகப்பரு
தொற்றுக்கள் ஆழமாகும் போது இரத்த கசிவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
16. முகப்பருக்களுக்கு இன்றைய வாழ்வியல் முறை
காரணமா?
ஆம்
அதுவும் ஒரு காரணமே ஹார்மோன் மாற்றம் மற்றும் மரபணுமாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் துரித
உணவுகள் மூலம் முகப்பருக்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது.
17. முகப்பருக்கள் இயல்பாகவே அதிகம்
தென்படுவது ஆண்களுக்கா அல்லது பெண்களுக்கா?
முகப்பருக்கள்
பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகின்றது.
18. முகப்பருக்கள் தீவிரமடைந்தால் வேறு
நோய்கள் வருவதற்கான வழிகள் உண்டா?
சில
சந்தர்பங்களில் உண்டு. உடல் முழுவதும் சீல் கோர்ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
19. வலியுடன் கூடிய முகப்பருக்கள் நமக்கு
சுட்டி காட்டுவது என்ன?
தொற்றின்
தீவிரத்தால் முகப்பருக்களில் வலி ஏற்படுகின்றன ஆதலால் முறையான சிகிச்சை ஆரம்ப
நிலையிலேயே எடுத்துக் கொள்வது சிறந்தது.
20. முகப்பருக்களின் தீர்வுகளை கண்டறிய
ஏதேனும் ஆய்வுகள் (லேப் டெஸ்ட்) உண்டா?
தோல்
பயாப்ஸி சோதனை நுண்ணுயிரி அறிவதற்கு கல்ச்சர் மற்றும் சென்சிடிவ் சோதனை உள்ளன பல
ஆய்வுகள் இருந்தாலும் அவை தேவையற்றது.
21. முகப்பருக்களுக்காக எடுத்துக்கொள்ளும்
மருந்துகளின் பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா?
ஹோமியோபதி
மருத்துவத்தில் இல்லை.
22. முகப்பருக்களுக்காக எடுத்துக்கொள்ளும்
மருந்துகளால் மேலும் உடல் அழகு பெறுமா?
ஹோமியோபதி
மருத்துவம் மேற்கொண்டால் முகப்பருக்கள் நீங்கி பளபளப்பு தன்மை கிடைக்கும்.
23. முகப்பருக்களுக்கான மருத்துவ முறை
மிகவும் விலை உயர்ந்ததாக இருக்குமா?
நமது
எதிர்பார்ப்புக்கு உள்ளேயே அமையும்.
24. முகப்பருக்களை நீக்குவதற்கு நவீன
மருத்துவ முறைகள் எவை?
லேசர், மாத்திரைகள், ஊசி போன்ற பல நவீன
மருத்துவ முறைகள் உள்ளன.
25. நவீன மருத்துவ முறைகளால் ஏற்படும்
விளைவுகள் என்ன?
நவீன
மருத்துவ முறையில் ஒவ்வாமை, தழும்புகள் மற்றும் சில
விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு ஆனால் ஹோமியோபதி மருத்துவத்தில் இல்லை.
26. நவீன மருத்துவ லேசர் சிகிச்சை முறையில்
முற்றிலும் பயனளிக்குமா?
பயன்
என்பதையும் தாண்டி பக்கவிளைவுகளும் அதில் உண்டு.
27. முகப்பருக்கள் ஒரு பரம்பரை நோயா?
ஆம்
ஹர்மோன் மாற்றங்கள் பொருத்து முகப்பருக்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
28. முகப்பருக்களுக்கு நீண்ட காலமாக
மருந்துகள் எடுப்பது அவசியமா?
குறைந்தது
3 முதல் 6 மாதம் காலம் வரை தேவைப்படலாம் நோயின் தொற்றைப்பொருத்தது.
29. முகப்பருக்களுக்கு ஆரம்ப அறிகுறி என்ன?
சிவந்த
நிலையில் வரும் சின்ன பருக்கள் ஆரம்ப அறிகுறியாகும்.
30. எதற்காக முகப்பருக்களுக்கு மருத்துவம்
அவசியம்?
எந்த
ஒரு நோய்களுக்கும் மருத்துவம் அவசியம் அதில் முகப்பருக்கள் மட்டும் விதிவிலக்கல்ல.